தூத்துக்குடி புறநகர் பகுதியில் டிசம்பர் 28 இன்று மின்தடை

தூத்துக்குடி புறநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை (டிச. 28) மின்விநியோகம் இருக்காது.


இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி அருகேயுள்ள அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், மாப்பிள்ளையூரணி, அய்யனார்புரம், திரேஸ்புரம், தாளமுத்துநகர், டேவிஸ்புரம், தருவைகுளம், சிலுவைப்பட்டி, அழகாபுரி, ராசபாளையம், பட்டினமருதூர் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 28) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றார் அவர்.