தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறி இருப்பதாவது:–

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை 1–9–18 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இந்தியன் ஆயில் நிறுவன சிலிண்டர்கள் தூத்துக்குடியில் ரூ.887 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.885 ஆகவும், கழுகுமலையில் ரூ.893 ஆகவும், கயத்தாரில் ரூ.888.50 ஆகவும், சாத்தான்குளம் பகுதியில் ரூ.903 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.887 ஆகவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன சிலிண்டர் ரூ.887 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

எனவே நுகர்வோர்கள், எரிவாயு முகவர்களிடம் இருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டருக்கு மேலே குறிப்பிட்டு உள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவை இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.