திருச்செந்தூர் பகுதியில் அக்டோபர் 25 மின் தடை

திருச்செந்தூர் பகுதியில் வியாழக்கிழமை (அக். 25) மின் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் மகேஷ் சாமிநாத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூர் கோட்டத்துக்குள்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகனேரி, குரும்பூர் மற்றும் காயல்பட்டினம் துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (அக். 25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம், கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்கோளுர் ஆகிய பகுதிகளுக்கு மின்சார விநியோகம் இருக்காது என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *