மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 4) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.


இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.4) காலை 10.30 மணி அளவில் ஆசிரியர் காலனி 1 ஆவது தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. முகாமில் பல முன்னணி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2,  பட்டப்படிப்பு,  டிப்ளமோ,  ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.