தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஊர்வலம்

தூத்துக்குடியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஊர்வலம் நடத்தினர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களான, சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு 9 மாதம் அனுமதிக்க வேண்டும், அரசு காலிப்பணியிடங்களில் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் முதல்–அமைச்சரின் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடந்தது.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தலைவர் பாக்கியசீலி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஆனந்தன், ஆனந்தசெல்வம், பால்ராஜ், பாஸ்கர், சேகர் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தொடக்கி வைத்தார். ஊர்வலம் வி.வி.டி. சிக்னல் அருகே முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் பார்த்திபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.