தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப். 15 முதல் மீன்பிடிக்கத் தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 15முதல் விசைப் படகுகளில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983இன் கீழ் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மீன் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில் கொண்டும்,  மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையிலும், திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி வரை ஆண்டுதோறும் 61 நாள்கள், அதாவது ஏப்ரல் 15 முதல் ஜூன் 14வரை மீன்பிடி விசைப் படகுகள், இழுவைப் படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அரசாணைப்படி நிகழாண்டில், ஏப்ரல் 15 முதல் ஜூன் 14வரை (இரு நாள்களும் உள்பட) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க, மீன்பிடி விசைப் படகுகள், இழுவைப் படகுகள் கடலுக்குச் செல்லக் கூடாது என்றார்