தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவில்பட்டி மின்வாரிய கோட்டத்திற்கு உள்பட்ட துணை மின் நிலைய பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 15) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம்.சகர்பான் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள்: கோவில்பட்டி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல் மில் பகுதி, முஹம்மதுசாலிஹாபுரம், இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி ஆகிய பகுதிகள், விஜயாபுரி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, கசவன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகள், சிட்கோ துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட முத்துநகர், சிட்கோ, ஜோதி நகர், புதுரோடு ஆகிய பகுதிகள், சிவஞானபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட சிவஞானபுரம், வாகைதாவூர், சவலாப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதிகள்.

பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்: கழுகுமலை துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கழுகுமலை, குமாரபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர். காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம் ஆகிய பகுதிகள், எப்போதும்வென்றான் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், சூரங்குடி ஆகிய பகுதிகள், எம்.துரைசாமிபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட வானரமுட்டி, காளாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புத்தூர், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய்த்தலைவன்பட்டி ஆகிய பகுதிகள், செட்டிக்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட செட்டிக்குறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளங்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலக்குறிச்சி, பெரியசாமிபுரம், மூர்த்தீஸ்வரபுரம் ஆகிய பகுதிகள், சன்னதுபுதுக்குடி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கயத்தாறு பேரூராட்சி பகுதிகள், ராஜாபுதுக்குடி, தலையால்நடந்தான்குளம், ஆத்திகுளம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சாலைப்புதூர், மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியங்குளம், என்.புதூர், நாரைகிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, ஆலந்தா ஒரு பகுதி, பிராஞ்சேரி, இத்திகுளம், வடக்கு செழியநல்லூர், காங்கீஸ்வரன்புதூர், குப்பனாபுரம், பருத்திகுளம், சன்னதுபுதுக்குடி, வடகரை, காற்றாலை மின்தொடர் 1, 2 ஆகிய பகுதிகள்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்: எட்டயபுரம் துணை மின் நிலைய வளாகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 8 எம்.வி.ஏ. உயர் அழுத்த மின்மாற்றிக்கு மின் சப்ளை கொடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், எட்டயபுரம் மின் விநியோகத்திற்கு உள்பட்ட எட்டயபுரம், சிந்தலக்கரை, நாவலக்கம்பட்டி, குமரெட்டியாபுரம், துரைச்சாமிபுரம், கீழஈரால், இளம்புவனம், பிதப்புரம், குமாரகிரி, புதூர் மற்றும் கடலையூர் மின் விநியோகத்திற்கு உள்பட்ட கடலையூர், பீக்கிலிபட்டி, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், அய்யாக்கோட்டையூர், முத்தலாபுரம், வீரப்பட்டி, கருப்பூர், மேலநம்பியாபுரம், அருணாசலபுரம், வெங்கடேஸ்வரபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, டிச. 13: தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை (டிச.15) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளர் செ. விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:<br />
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1 ஆம் ரயில்வே கேட், 2 ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, கடற்கரை சாலை, தெப்பகுளம், சிவன்கோயில் தெரு, டபுள்யூ.ஜி.சி சாலை, ஜார்ஜ் சாலை, வி.இ. சாலை, ஸ்டேட் பாங்க் காலனி, முத்துக்கிருஷ்ணாபுரம், முத்தம்மாள் காலனி, கேடிசி நகர், சிவந்தாகுளம் பிரதான சாலை, தாமோதரநகர், குறிஞ்சிநகர், சிதம்பரநகர், பிரையன்ட் நகர், சுப்பையா முதலியார் புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம், உடன்குடி பகுதியில்..
திருச்செந்தூர்,  சாத்தான்குளம் மற்றும் உடன்குடி பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாகசனிக்கிழமை(டிச.15)மின்தடை செய்யப்படுகிறது.<br />
இது குறித்து திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் இரா.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

சாத்தான்குளம் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறயிருப்பதால் இந்த உபமின் நிலையத்துக்கு உள்பட்ட சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம் பகுதியிலும், நாசரேத் உபமின் நிலையத்த்துக்கு உள்பட்ட நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதியிலும், செம்மறிக்குளம் உபமின்நிலையத்துக்கு உள்பட்ட மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகளிலும் , பழனியப்பபுரம் உபமின்நிலையத்துக்கு உள்பட்ட மீரான்குளம், பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம், அம்பலசேரி, அறிவான்மொழி பகுதியிலும், நடுவக்குறிச்சி உபமின் நிலையத்துக்கு உள்பட்ட நடுவக்குறிச்சி, தட்டார்மடம், புத்தன்தருவை, பூச்சிக்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, ஒசரத்துகுடியிறுப்பு, காந்திநகர், கொம்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 15) பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

உடன்குடி: இதே போல உடன்குடி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட உடன்குடி தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய ஊர்களுக்கு சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.