தூத்துக்குடி மாவட்ட அரசு இசை பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி டூவிபுரம் 11ஆவது தெருவில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர், மாணவிகள் சேர்க்கை மே 2ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.<br />
குரலிசை, பரத நாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில்,  நாகசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. காலஅளவு மூன்று ஆண்டுகள். அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அரசு விடுதி வசதியும் செய்துதரப்படும். வெளியிடங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண வசதியும் செய்துதரப்படும்.

&nbsp;மூன்று ஆண்டுகள் பயின்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாகசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோயில்களில் பணிபுரியவும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசைநிகழ்ச்சிகளில் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, கலை ஆர்வமுள்ள மாணவர், மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தலைமைஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி,  வி.வி.டிசாலை,  டூவிபுரம் 11ஆவது தெரு,  தூத்துக்குடி- 3 என்ற முகவரியிலும், 9487739296 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.